ஆதரவற்ற குழந்தைகளுடன் நேரத்தை கழிக்கும் ரவி மோகன்…. வைரலாகும் காணொளி
நடிகர் ரவி மோகன் ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுடன் விளையாடும் மற்றும் நடினமாடி மகிழும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
விவாகரத்துக்கு அறிவிப்புக்கு பின்னர் தனது சமூக வளைத்தள பக்கத்தில் The New Me என பதிவிட்டார் அதனை தொடர்ந்து அவர் வாழ்வில் ஒவ்வொரு விடயத்திலும் மாற்றங்களை செய்து வருகின்றார்.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். கடந்த ஆண்டு இறுதியில் திடீரென பெயரை மாற்றினார்,
இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்திலும் ரவி மோகன் நடித்து வருகிறார் .
இந்நிலையில் ரவி மோகன், ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவிட்டுள்ள காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |