எதுக்கு இந்த சகுனி வேல.. களத்தில் இறங்கிய முத்து- குடும்பம் பிரிந்து விடுமா?
அருணை பொறி வைத்து சிக்க வைத்த முத்துவின் உண்மையான முகம் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியல் குடும்பத்தில் வாழ வந்திருக்கும் மருமகள்களும், மாமியாரின் பண ஆசையும் என கருப்பொருளுடன் நகர்த்தப்படுகிறது.
முத்து கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று வரும் நிலையில், புதிதாக சீதாவை திருமணம் செய்து மீனாவின் குடும்பத்திற்குள் வந்த அருண், குடும்பத்தை பிரிக்க பல வேலைபாடுகளை செய்து வருகிறார்.
அப்படி பல நாட்களாக காத்திருந்த அருணிற்கு செல்வம் ஒரு வாய்ப்பை கொடுத்து, பிரச்சினையை கிளறி விடுகிறார்.
வசமாக சிக்கிய அருண்
இந்த நிலையில், செல்வம் பிரச்சினையில் இருந்து ஆரம்பித்த அருண், முத்துவை பற்றிய தவறான கருத்துக்களை சீதாவிடம் போய் கூறுகிறார்.
அதன் பின்னர் பிரச்சினை கொஞ்சம் பெரிதாக நடக்காத விடயங்களை சீதாவிடம் போய் கூறுவதை வழக்கமாக செய்து வரும் பொழுது சீதாவிற்கு முத்து மீதுள்ள மரியாதை குறைந்து வெறுப்பு வர ஆரம்பிக்கிறது. அதனால் மீனாவுடன் சண்டைக்கு செல்கிறார்.
“ உன்னுடைய புருஷன் ஒரு ரௌடி தானே.. அவருக்கு படிக்கல அதுனால அவருக்கு எதுவும் விளங்காது..” என முத்துவை தாக்கி பேசுகிறார். இதனை முடிக்க வேண்டும் என திட்டம் போட்ட முத்து, அருணின் வாயை கிளறி அவர் வாயால் அனைத்து உண்மைகளையும் கூற வைக்கிறார்.
இதனை காருக்குள் இருந்த மீனாவும், சீதாவும் கேட்கிறார்கள். சீதாவிடம் வசமாக சிக்கிய அருண் இனி என்ன கதை கூற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
