Siragadikka Aasai: அம்மா பரிமாறிய உணவு... தந்தையிடம் கூறி கண்கலங்கிய முத்து! உணர்வுப்பூர்வமான ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தனது அம்மாவின் கையால் சாப்பிட்டதை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி கண்கலங்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய ப்ரொமோ காட்சி வந்துள்ளது.
கடந்த நாட்களில் ரோகினி முத்து இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று வந்த நிலையில் விஜயாவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது சமூக சேவை செய்து டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்று கூறி அன்னதானம், மீனா மீது பாசமாக இருத்தல் என அனைத்தையும் செய்து வருகின்றனர்.
இன்றைய கதையில் சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு சென்று, அனைத்து சடங்கையும் விஜயாவே செய்துள்ளார்.
வீட்டில் உள்ளவர்களுக்கு விஜயாவின் மாற்றத்தினை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. இந்நிலையில் விஜயாவின் அன்னதானத்திற்கு முத்து வந்துள்ளார்.
பந்தியில் அமர்ந்து விஜயாவிடம் உணவு வாங்கி சாப்பிடுகின்றார். இத்தருணத்தின் போது அவரது கண்ணில் ஆனந்த கண்ணீரே வந்துள்ளது.
மேலும் இந்த விடயத்தினை வீட்டில் வந்து அனைவரிடமும் கூறி கண்கலங்கியுள்ளார். இவ்வாறு தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |