Siragadikka Aasai: நூலிழையில் உயிர் தப்பிய முத்து... கடைசியில் போலிசாரிடம் சிக்கிய கொடுமை
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் காரில் பிரேக்கை ரோகினி சிட்டியை வைத்து கழற்றிவிட்டுள்ள நிலையில், தற்போது நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி கூறிய பொய்யில் மலேசியா மாமா குறித்த உண்மை அம்பலமாகிய நிலையில், விஜயா ரோகினியை மனோஜிடம் இருந்து பிரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
அவ்வப்போது சிந்தாமணியுடன் சேர்ந்து கொண்டு மீனாவிற்கும் குடைச்சல் கொடுத்து வந்த நிலையில், தற்போது ரோகினியும் சிட்டியுடன் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டுள்ளார்.
இறுதியில் முத்து விபத்தில் சிக்க இருந்த நிலையில் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். ஆனால் சீதாவின் காதலரான போலிசாரிடம் சரியாக மாட்டிக் கொண்டுள்ளார்.
சந்திக்கும் நேரம் அனைத்தும் பிரச்சனையில் இருக்கும் சீதாவின் காதலர் சீதாவை முத்துவின் சம்மதத்துடன் கரம்பிடிப்பாரா? சீதாவின் மாமா முத்து என்பதை போலிசார் எப்பொழுது அறிந்து கொள்வார்? என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |