Siragadikka Aasai: பெத்தவளே தூக்கி போட்டுட்டு போயிட்டா... பேச முடியாமல் தவிக்கும் ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷை தத்தெடுப்பதாக கூறி விஜயாவிடம் முத்து வாக்குவாதம் செய்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. மாமியார் வீட்டில் நடுத்தர பெண் படும் கஷ்டத்தினை அழகாக எடுத்துக் காட்டியுள்ளது.
மேலும் மூன்று மகன்களில் இரண்டு மகன்களை மட்டும் நன்றாக பார்க்கும் தாய் ஒரு மகனை மட்டும் ஒதுக்கி வைக்கின்றார். இதற்கான காரணம் இன்னும் சீக்ரெட்டாக இருக்கின்றது.
இந்நிலையில் ரோகினி மகன் கிரிஷ் பிறந்தநாள் வந்துள்ள நிலையில், எதிர்பாராத விதமாக முத்து மற்றும் மீனா அங்கு சென்றுள்ளனர்.
அங்கு க்ரிஷ் அம்மா குறித்த தகவலையும் தெரிந்து கொண்டனர். இதனால் முத்துவும் மீனாவும் க்ரிஷை தத்தெடுப்பதற்கு பேசி வருகின்றனர்.
ஆனால் இதற்கு விஜயா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துடன், க்ரிஷ் அம்மா ரோகினி என்பது தெரியாமல் பயங்கரமாக பேசவும் செய்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |