Siragadikka Aasai: ரோகினி கர்ப்பமாக இருக்கிறாரா? மீனா எழுப்பிய பூகம்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கர்ப்பமாக இருக்கின்றார் என்று மீனா தவறாக புரிந்து கொண்டு வீட்டை அதகளப்படுத்தி வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜிற்கு வங்கியிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு கிரெடிட் கார்டு வந்துள்ள நிலையில், ஹனிமூன் செல்ல பிளான் செய்துள்ளார்.
ரோகினி மகப்பேற மருத்துவமனைக்கு வந்து போனதை சீதா பார்த்து அவரது அக்கா மீனாவிடம் கூறியுள்ளார். மேலும் சீதாவிற்கு குறித்த மருத்துவமனையில் வேலையும் கிடைத்துள்ளது.
ரோகினியை அங்கு பார்த்த சந்தோஷத்தில் மீனா தானாக கற்பனை செய்து கொண்டுள்ளார்.
ஆம் ஒருவேளை ரோகினி கர்ப்பமாக இருக்கிறாரா? என்று நினைத்துக் கொண்ட மீனா, அதனை ரோகினியிடம் கேட்காமல் வீட்டிற்கு வந்து இனிப்பு செய்கின்றார்.
வழக்கம் போல் மீனாவை மாமியார் திட்டி ஜாடையாக பேசியுள்ளார். உடனே மீனா தனது தங்கைக்கு வேலை கிடைத்ததற்காக இல்லை மாமா... ரோகினிக்காவும் தான் செய்தேன் என்று குடும்பத்தினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |