சிறகடிக்க ஆசை மீனா சகோதரியா இவங்க? அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே
அச்சு அசல் பார்ப்பதற்கு சிறகடிக்க ஆசை சீரியல் மீனா போலவே அவருடன் பெண்ணொருவர் இருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
கோமதி பிரியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா.
இவர் மற்ற நடிகைகள் போல் அல்லாமல் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். குடும்பத்தில் மூன்று மருமகள்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறது என்பதனை கருவாகக் கொண்டே சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது.
இந்த சீரியலில் நாயகியாக இருக்கும் மீனா, குடும்பத்தை எப்படி சமாளித்து வைத்துக் கொள்கிறார் என்பதனை அழகாக சீரியலில் காட்டி வருகிறார்கள்.
ஊர் சுற்றும் மீனா
இந்த நிலையில், சீரியலை போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமதி ப்ரியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.
அந்த வகையில், மணாலிக்கு சுற்றுலா சென்ற காணொளியை பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் கோமதி ப்ரியாவுடன் அவர் போலவே இருக்கும் இளம் பெண்ணொருவர் இருக்கிறார்.
காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “இவர் உங்களுடைய சகோதரியா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |