Siragadikka Aasai: முத்து மீனா இடையே ஏற்பட்ட விரிசல்! ஸ்ருதிக்கு இது தேவையா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மேலே புதிய அறை எடுப்பதற்கு நபர் ஒருவரை அழைத்து வந்து விபரங்களைக் கேட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த முத்து மீனா வாழ்வில் பிரச்சனை எழுகின்றது.
மீனாவின் தம்பி சத்யா தனது பிறந்தநாள் அன்று கோவிலில் அன்னதானம் கொடுக்கின்றார். இதற்கு மீனாவை அழைக்கின்றார். ஆனால் முத்து என்னை அழைக்காத இடத்திற்கு நீ போகக்கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனால் ஸ்ருதி மீனாவின் மனதை மாற்றி அவரை கோவிலுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றார். கோவிலுக்கு வந்த முத்து மீனா கோபத்தில் முறைத்து பார்க்கின்றார்.
மகிழ்ச்சியாக செல்லும் சீரியலில் அடுத்த சண்டை தான் ஆரம்பமாகும். இதே போன்று இந்த முறையும் சண்டை சத்யாவினால் எழுந்துள்ளது. இதை காரணமாக வைத்து சிட்டி தனது சுயரூபத்தை காட்டி இருவரையும் பிரித்துவிடுவாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |