Siragadikka Aasai: மீனா கண்ணில் மீண்டும் சிக்கிய க்ரிஷ்! ரோகினி மாட்டிக்கொள்வாரா?
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா மீண்டும் க்ரிஷை அவதானித்துள்ள நிலையில், அவனை சந்திக்க ஓடிவருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலிலுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், முத்து மற்றும் மீனாவின் நடிப்பு அட்டகாசம் என்று தான் கூற வேண்டும்.
அம்மாவிற்கு பிடித்த பிள்ளையாக மனோஜும், பிடிக்காத பிள்ளையாக முத்துவும் இருக்கின்றனர். இந்நிலையில் மனோஜ் க்ரிஷ் படிக்கும் பள்ளிக்கு சிறப்பு பேச்சாளராக செல்கின்றார்.
இந்நிலையில் க்ரிஷ் அம்மாவை பார்க்க அடம்பிடிப்பதாக ரோகினியிடம் பள்ளியிலிருந்து போன் செய்து கூறியுள்ளனர். இதனால் ரோகினி க்ரிஷை பார்க்க சென்றுள்ளார்.
அங்கு சென்று கார் டிரைவர் மூலமாக க்ரிஷை அழைத்து வரும் தருணத்தில் அவனை மீனா பார்த்துள்ளார். மேலும் க்ரிஷிடம் பேசுவதற்காக ஓடி வருகின்றார்.
காருக்குள் இருந்த ரோகினியைப் பார்த்து க்ரிஷ் பாசத்தை வெளிக்காட்டுகின்றான். இந்நிலையில் மீனாவின் கண்ணில் பட்ட க்ரிஷ் அவரிடம் சிக்குவாரா? ரோகினியும் சேர்ந்து மாட்டிக்கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |