Siragadikka Aasai: மனோஜ் வாங்கிய புதுவீட்டில் உலாவரும் பேய்... நடுநடுங்கிய குடும்பத்தினர்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய புது வீட்டில் பேய் இருப்பதாக பெண் மந்திரவாதி ஒருவர் கூறி பீதியில் ஆழ்த்தியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மீனா முத்து இருவரும் பல தடைகளை தாண்டி தங்களது உழைப்பினால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் புதிதாக வீடு ஒன்றினை வாங்கியுள்ளனர்.
தங்களிடம் உள்ள பணத்தை பறிகொடுத்து ஏமாந்துள்ளது என்பது கூட தெரியாமல் மகிழ்ச்சியின் உச்சத்தில் காணப்படுகின்றனர்.
மேலும் வீட்டிற்கு வாஸ்து பார்த்து பெயர் வைத்துள்ள நிலையில், தற்போது வீட்டில் பேய் இருக்கின்றதா என்பதையும் மந்திரவாதி வைத்து சோதித்து வருகின்றனர்.
இந்த சோதனையில் குறித்த வீட்டில் பேய் இருப்பதாக பெண் மந்திரவாதி கூறியுள்ள நிலையில், ஒட்டுமொத்த குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |