Siragadikka Aasai: க்ரிஷை பள்ளியிலிருந்து நிரந்தரமாக நிறுத்திய ரோகினி... மர்மத்தை கண்டுபிடிக்க கிளம்பிய முத்து, மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷை ரோகினி பள்ளிப் படிப்பிலிருந்து பாதியிலேயே நிறுத்தி சான்றிதழையும் வாங்கி வந்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் பல சீக்ரெட்டை மறைத்து கதைகளம் சென்று கொண்டிருக்கின்றது.
மீனா முத்து இருவரும் தனக்கு வரும் இன்னல்களை அடுத்தடுத்த சமாளித்து வரும் நிலையில், தற்போது க்ரிஷ் ரோகினியின் பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது.
க்ரிஷன் பாட்டி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய நிலையில், அவரை முத்து மீனா இருவரும் தேடி வருகின்றனர். இந்நிலையில் க்ரிஷ் மீனா வீட்டில் இருந்து வருகின்றான்.
தனது அம்மா அதே வீட்டில் இருப்பதால் க்ரிஷ் அங்கிருந்து செல்வதற்கு அடம்பிடிக்கின்றார். தற்போது ரோகினி பள்ளிக்கு வந்து க்ரிஷின் படிப்பினை பாதியிலேயே நிறுத்திவிட்டு சான்றிதழை வாங்கி சென்றுள்ளார்.
க்ரிஷ் ரோகினியிடம் இருக்க வேண்டும் என்பதற்காகவே க்ரிஷின் பாட்டி அவரைவிட்டுவிட்டு மருத்துவமனையிலிருந்து சென்றுள்ளார்.
ஆனால் ரோகினி தனது வாழ்க்கையை மட்டும் காப்பாற்றிக் கொள்வதற்கு க்ரிஷை அங்கிருந்து யாருக்கும் தெரியாத இடத்தில் விடுவதற்கு தயாராகி வருகின்றார்.
தற்போது க்ரிஷை தனது தோழிவீட்டில் விட்டுள்ளார். ஆனால் அவரும் ஒரு வாரம் மட்டுமே காலக்கெடு கொடுத்துள்ளார். தற்போது க்ரிஷ் பள்ளியில் இருந்து சென்றது முத்து மீனாவிற்கு தெரிந்துள்ளது.
மீனா க்ரிஷ் விடயத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக கூறி, அதனை நாம் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |