Siragadikka Aasai: நான் ரோகினியின் மாமா கிடையாது... அம்பலமாகிய உண்மை! விஜயாவின் அதிரடி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் மாமா தான் கிடையாது என்ற உண்மையை ப்ரவுன் மணி அண்ணாமலை வீட்டில் வந்து உடைத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனாவை தொழிலில் இருந்து விரட்டுவதற்கு சிந்தாமணி பல சதிகளை செய்துவரும் நிலையில், மீனா அதை அனைத்தையும் சாமர்த்தியமாக கடந்து வருகின்றார்.
இந்நிலையில் இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரோகினியின் மலேசியா மாமா உண்மை வெளியே அம்பலமாகியுள்ளது.
அதாவது ப்ரவுன் மணி நேரடியாக அண்ணாமலை வீட்டிற்கே வந்து தான் ரோகினியின் மாமா கிடையாது என்ற உண்மையை உடைத்துள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளதுடன், விஜயா ரோகினியை வீட்டை விட்டு வெளியேற்றுவது போன்று ப்ரொமோ காட்சி காட்டப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதா? அல்லது ரோகினியின் கனவாக இருக்குமா? என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
