சடலமாக மீட்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... காரணம் என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் அருணிற்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை சடலமாக மீட்கப்பட்டுள்ளது சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ராஜேஸ்வரி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், இந்த சீரியலில் அருணின் அம்மாவாக நடிகை ராஜேஸ்வரி நடித்திருந்தார்.
இவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு ஹேமந்த் மற்றும் தணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்திருந்தார். இந்நிலையில் ராஜேஸ்வரியின் குடும்பத்தில் கடந்த சில நாட்களாக பிரச்சனை எழுந்துள்ளது.
அதாவது கணவருக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், கடந்த 8ம் தேதி கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்த நிலையில், நேற்று அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்கு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகை ராஜேஸ்வரியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த சின்னத்திரை பிரபலங்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இவரது இறப்பு குறித்து சைதாப்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |