Siragadikka Aasai: எரிமலையாய் வெடித்த முத்து- கவரின் நகை விடயத்தில் விஜயா, மனோஜ் சிக்குவார்களா?
கவரின் நகையை மீனா வீட்டிலுள்ளவர்கள் தான் மாற்றியிருப்பார்கள் என விஜயா பழியை மீனா மீது போட முயற்சிக்கிறார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பழியை மீனா மீது போட்ட விஜயா
இந்த நிலையில், மீனா பாட்டிக்கு ஒரு இரட்டை வட சங்கிலி வாங்குவதற்காக மீனாவின் நகைகளை விஜயாவிடம் வாங்கிக் கொண்டு நகை கடைக்கு செல்கிறார்.
இந்த சமயத்தில் விஜயாவிடம் இருந்து வாங்கிய நகைகள் அனைத்தும் பொலியானது என தெரியவருகிறது. பாட்டியின் பிறந்த நாள் வைபோகம் முடிந்த பின்னர் முத்து நடந்த அனைத்தையும் அண்ணாமலையிடம் கூறுகிறார்.
ஆனால் இதை கேட்ட விஜயா எந்தவிதமான சளனமும் இல்லாமல், “ எனக்கு ஒன்றும் தெரியாது. மீனா வீட்டிலுள்ளவர்கள் தான் இப்படி மாற்றியிருப்பார்கள்..” என கதையை அப்படியே மீனா பக்கம் திருப்புகிறார்.
இந்த விடயம் மீனா- முத்துவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அத்துடன் ஸ்ருதி இந்த விடயத்தை பொலிஸிடம் கொண்டு செல்லலாம் என ஐடியாக கொடுக்கிறார்.
இனி வரும் நாட்களில் என்ன நடக்கப்போகின்றது என பொருத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |