siragadikka-aasai: பையனுக்காக துணிந்து வரும் ரோஹினி.. மீனா- முத்து வருகையால் பகிர் கிளம்பிய தாயார்- பரபரப்பான தருணங்கள்
ரோஹினி பையனுக்காக என்ன நடந்தாலும் பரவாயில்லை என மருத்துவமனைக்கு வருகிறார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமிக்கு இணையாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திணறும் ரோஹினி
இந்த நிலையில், ரோஹினியின் மகன் கிரிஷிற்கு கண்ணில் அடிபட்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
அப்போது அங்கிருந்த மீனா - முத்து ரோஹினியின் அம்மாவையும், கிரிஷையும் அவருடைய விஜயா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இதன் போது ரோஹினி தான் கிரிஷின் அம்மா என கிரிஷிற்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டு ரோஹினி தன்னுடைய பையனுக்காக மருத்துவமனைக்கு செல்கிறார். அப்போது கிரிஷை பார்க்க வந்த மீனா - முத்துவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
இவர்களை பார்த்த பதற்றத்தில் நிற்கும் ரோஹினி வசமாக முத்துவிடம் சிக்கிக் கொள்வாரா? ரோஹினி அடுத்து என்ன செய்வார்? என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |