Siragadikka Aasai: சாமியாரை பார்த்த மகிழ்ச்சியில் விஜயா... முத்துவையும் பிரிக்க சதியா?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மனோஜ் மட்டுமின்றி, மீனா முத்துவையும் பிரிப்பதற்கு விஜயா சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் கூறிய பொய்களில் ஒன்றான மலேசியா மாமா அம்பலமாகியுள்ளது. இதனால் விஜயா ரோகினி மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றார்.
இதனால் அவரை கொடுமைப்படுத்துவதுடன், மனோஜிடம் நெருங்கவிடாமலும் இருக்கின்றார். மீனா விடயத்தில் விஜயா சிந்தாமணியுடன் சேர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றார்.
ஆனால் எந்தவொரு சவாலையும் மீனா முத்துவை வைத்து எளிதாக கடந்து வந்துவிடுகின்றார். தற்போது விஜயாவின் வன்மம் மீண்டும் ரோகினி, மீனா மீது வந்துள்ளது.
மனோஜ் ரோகினியை மட்டுமின்றி, மீனா முத்துவையும் சாமியாரை வைத்து பிரிப்பதற்கு பிளான் செய்துள்ளார். இதற்காக தனது தோழியை அழைத்துக் கொண்டு சாமியாரையும் சென்று பார்த்துள்ளார்.
முதலில் ரோகினியை பிரித்துவிட்டு அடுத்து மீனாவின் வாழ்க்கைக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாக கூறி சந்தோஷப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |