ரூ.1000 கொடுத்தால் போதும் திருமணத்திற்கு 15 லட்சம் வாங்கலாம்- அதிரடியாக அமுலுக்கு வரும் திட்டம்
பொதுவாக பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் எவ்வளவு சந்தோசம் இருந்தாலும், பெற்றோர்களுக்கு ஒரு சின்ன பயம் இருக்கும்.
அவர்களின் படிப்பு, அடிப்படை தேவைகள், திருமணம் போன்றவற்றிற்கு என்ன செய்வது என்ற பயம் கண்டிப்பாக இருக்கும். இதற்காக சிலர் சேமிப்பு திட்டங்களை கையாள்வார்கள்.
அந்த வகையில், பெண் குழந்தை பிறந்தவுடன் ஒவ்வொரு மாதமும் தவறாமல் முதலீடு செய்து வந்தால் மகள் மேஜர் ஆவதற்கு முன்பு பெரிய தொகையை பார்க்கலாம்.
குறித்த திட்டம் தொடர்பில் தொடர்ந்து பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
SIP சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களின் எதிர்காலத்திற்காக மாதந்தோறும் 1,000 ரூபாய் முதலீடு செய்தால், அவள் வளரும் போது சுமார் 15 லட்சம் கிடைக்கும் என (SIP) முதலீட்டுத் திட்டம் கூறுகின்றது.
இது பெண் பிள்ளைகள் உள்ள குடும்பத்தினர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
குறித்த திட்டமானது சிறிய முதலீடு பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சந்தை அபாயங்கள் ஏற்படலாம்.
நீண்ட கால முதலீடாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் சில சமயங்களில் வழமையாக கொடுக்கின்ற 12 சதவீதம் விட அதிகமாகவும் கொடுக்கலாம்.
இதன்படி, குழந்தை பிறந்தவுடன், ரூ. 1000 முதலீடு செய்யத் தொடங்கினால், 18 வயதிற்குள் 14 லட்சத்துக்கு மேல் பணம் சேர்ந்து விடும்.
டாப்-அப் தொகை அதிகரிப்பு
எஸ்.ஐ.பி (SIP) முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகமாக பணம் செலுத்தினால் அது டாப்-அப் எனப்படுகிறது.
இப்படி முதலீடு செய்பவர்களுக்கு தொகையில் 10 சதவீதம் அதிகரிக்கும்.
உதாரணமாக, இரண்டாம் ஆண்டில் ரூ.1000க்கு பதிலாக ரூ.1100 சேமிக்க வேண்டும். மூன்றாம் ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1210 முதலீடு செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தரவுகளின்படி, 18 ஆண்டுகளில் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.14,41,466 ஆக இருக்க வேண்டும்.
இதனை திருமணம், உயர்கல்வி மற்றும் பிற தேவையான செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம். அதிலும் முதலீட்டு தொகைக்கு 12 முதல் 15 சதவீதம் வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. 15 சதவீதம் வட்டி கிடைத்தால் மொத்தம் ரூ.19 லட்சத்தை பெறலாம்.
முக்கிய குறிப்பு
இது வெறும் இணையத்தில் பெறப்பட்ட தகவல் மாத்திரமே.. உரிய தகவல்களை குறித்து நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |