ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் மனைவி நடனம்: வெளுத்து வாங்கிய பாடகி சின்மயி
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது குறித்து சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்த நிலையில், பாடகி சின்மயி வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாடகி சின்மயி
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவரான சின்மயி கன்னத்தில் முத்தம்மிட்டாள் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே... பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலே சூப்பர் ஹிட்டானது.
அதனை தொடர்ந்து தமிழில் பாடல் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. சின்மயி பாடகி மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞர்களில் ஒருவரும் ஆவார்.
வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை MeToo மூலம் சின்மயி முன்வைத்தார். அதன் காரணமாக இவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இந்த பிரச்சினையின் பின்னர் தமிழில் டப்பிங் பேசாமல் இருந்து வந்த சின்மயியை, தடைகளை மீறி லியோ படத்தில் திரிஷாவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டப்பிங் பேச வைத்தார்.இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தன.
அண்மையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடியிருந்தார்.அது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியது.
இந்த குரலையா தடை செய்து வைத்திரு்ககின்றார்கள் என இணையதளவாசிகள் பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டிதீர்த்தனர். இதையடுத்து பலரும் சின்மயிக்கு ஆதரவாக முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் சின்மயி ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா குறித்து வரும் விமர்சனங்களுக்கு கடும் காட்டமாக பேசி தற்போது வெளியிட்டுள்ள காணொளியொன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
