அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்... பாடகி சின்மயி open talk!
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவரான சின்மயி கன்னத்தில் முத்தம்மிட்டாள் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே... பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலே சூப்பர் ஹிட்டானது.
பாடகி சின்மயி
அதனை தொடர்ந்து தமிழில் பாடல் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. சின்மயி பாடகி மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞர்களில் ஒருவரும் ஆவார். வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை MeToo மூலம் சின்மயி முன்வைத்தார்.
அதன் காரணமாக இவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இந்த பிரச்சினையின் பின்னர் தமிழில் டப்பிங் பேசாமல் இருந்து வந்த சின்மயியை, தடைகளை மீறி லியோ படத்தில் திரிஷாவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டப்பிங் பேச வைத்தார்.
இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தன. அண்மையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடியிருந்தார்.அது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியது. இந்த குரலையா தடை செய்து வைத்திரு்ககின்றார்கள் என இணையதளவாசிகள் பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டிதீர்த்தனர்.
இதையடுத்து பலரும் சின்மயிக்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். இந்நிலையில் சின்மயி அளித்த பழைய பேட்டி ஒன்று மீண்டும் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
அந்த பேட்டியில், வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விதம் குறித்து சின்மயி தெளிவாக கூறியுள்ளார். “வைரமுத்து என்னை கட்டிப்பிடித்து அணைக்கும்போது, நான் அப்படியே உறைந்துவிட்டேன். இது என்னமோ தவறு என்று தோன்றியது.
எனக்கு கையும் காலும் ஓடவில்லை. ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். பின்னர் பதறியடித்து ஓடிவிட்டேன். என் அம்மா கீழே இருந்தார். அவர் அங்கு இருப்பதை அறிந்ததாலேயே அந்த ஆள் இப்படி நடந்தார்.
என் அம்மா என்னை தனியா விடமாட்டார். நான் இப்படி நடந்ததைக் கூறிய போது, அம்மா ‘உன் கேரக்டரை சோதிக்க இப்படி பண்ணியிருப்பார்கள்.
இவர்கள் பெரியவர்கள், எது சொன்னாலும் கொலை கூட பண்ணி விடுவார்கள்’ என கூறினார்” என்று சின்மயி பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது ஒரு பழைய பேட்டியாக இருந்தாலும், தற்போது மீண்டும் இணையத்தில் புதிய புயலை கிளப்பிவருகின்றது. உண்மைகளை புதைக்க முடியாது என இதைத்தான் நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |