Single Pasanga: ஏன்டா..என் உடம்பு சைஸ் என்ன, அவ சைஸ் என்ன? வெளுத்து வாங்கிய தீபா!
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் நடிகை தீபாவின் கணவர் இணைந்து நடனமாடியதால், விளையாட்டாக மணிமேகலையுடன் சண்டையிடும் தீபாவின் நகைச்சுவை காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கண்களை கட்டிக்கொண்டு தனது ஜோடியை கண்டுப்பிடிக்கும் டாஸ்கில், மணிமேகலை தனது கணவர் உசைனுக்கு பதில் தீபா அக்காவின் கணவருடன் இணைந்து நடனமாடியதால், ஏற்பட்ட சண்டை காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        