single pasanga: ஐஸ்வர்யா ராயின் லுக்கை ரீகிரியேட் செய்த ஆல்யா மானசா! வைரலாகும் காணொளி
சிங்கிள் பசங்க நிகழ்ச்சிக்காக நடிகை ஐஸ்வர்யா ராயின் லுக்கை ரீகிரியேட் செய்து சீரியல் நடிகை ஆல்யா மானசா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'.இந்த நிகழ்ச்சிக்கு தற்போது பெருமளவில் ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.
மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், நடிகைகள் ஆல்யா மானசா, ஸ்ருதிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி, புகழ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் பலர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கிள் பசங்க பசங்க நிகழ்ச்சிக்காக நடிகை ஐஸ்வர்யா ராயின் லுக்கை ரீகிரியேட் செய்து சீரியல் நடிகை ஆல்யா மானசா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.