பாடகி வாணியின் மரணம் நிகழ்ந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை
பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் இன்று அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில், தடவியியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
பாடகி வாணி ஜெயராம்
பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம் வேலூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். 1971ம் ஆண்டு குட்டி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிய இவர், தொடர்ந்து 50 ஆண்டுகளாக 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
பணியாளர் கூறியது என்ன?
வாணி வீட்டில் 10 ஆண்டுக்கு மேலாக பணிப்பெண்ணாக இருந்த மலர்க்கொடி கூறுகையில், அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது நேற்றைய தினம் நன்றாகவே இருந்ததாகவும், தான் வீட்டிற்கு சென்ற பின்பு கூட வாணியம்மாவுடன் போன் பேசினேன்.
நான் வீட்டிற்கு செல்லும் போது நல்ல ஆரோக்கியத்துடனே இருந்ததாகவும், எந்தவொரு சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் விருது வாங்கியுள்ளதால் அதிகமான போன் கால் வந்து கொண்டிருந்ததாகவும், தான் இன்று காலை வேலைக்கு வந்து போன் செய்தேன் எடுக்கவில்லை. பின்பு எனது கணவரை விட்டு போன் செய்ய கோரினேன் எடுக்கவில்லை.
பின்பு சந்தேகப்பட்ட நிலையில், கீழே இருந்தவர்களிடம் தகவல் கொடுத்து, பொலிசாரை வரவழைத்ததாகவும், அவரது நெற்றியில் ரத்த காயம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
வாணியின் மரணத்தில் மர்மம் இருப்பதால், தடயவியல் நிபுணர்கள் வீட்டை சோதனை செய்வதாக கூறப்படுகின்றது.
பிரேத பரிசோதனை அறிக்கை
பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதி ஊர்வலத்திற்கு தற்போது தயாராகியுள்ளது.
30 குண்டுகள் முழங்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கின்றது.
இந்நிலையில் பாடகி வாணி ஜெயராம் கீழே விழுந்ததில், அவர் தலையில் அடிபட்ட காயமே அவர் மரணத்திற்கு காரணமாக உள்ளது. படுக்கையறையில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேஜை மீது விழுந்ததில் இந்த பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நெற்றியில் உள்ள காயம் மற்றும் மேஜையின் விளிம்பில் உள்ள ரத்தக் கறையை வைத்து பாடகி வாணி ஜெயராம், மேஜையின் மீது விழுந்து தலையில் அடிபட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளதாகவும், தடயவியல் நிபுணர் சோதனையிலும் இது உறுதியாகி உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் இறுதியாக அவர் வீட்டிற்கு வெளிநபர்கள் யாரும் வரவில்லை என்றும் சிசிடிவி ஆய்வில் தெரியவந்துள்ளதையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது.