பிரபல பின்னணி பாடகி திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்
மாராட்ய திரையுலகில் புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி சுலோச்சனா சவான் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ள ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சுலோச்சனா சவான்
மராட்டிய திரையுலகில் புகழ்பெற்ற பாடகியாக வலம்வந்தவர் நடிகை சுலோச்சனா சவான்(92). மராத்தி நாட்டுப்புற இசைக்காக தன்னையே அர்ப்பணித்த இவர் தனது மங்கேஷ்கர் சகோதரிகளுடன் சேர்ந்து சிறந்த பாடகியாக திகழ்ந்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சமீபத்தில் வயதுமூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட சுலோச்சனா மும்பையில் குர்கானில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
குறித்த பாடகியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருவதுடன். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.