'தனுஷ் அவரின் நண்பர்களால் தான் கெட்டுப்போனார்' திடீரென பல்டி அடித்த சுசித்ரா!
தென்நிந்திய சினிமாவில் சுமார் 20 ஆண்டுகாலமாக பாடகியாக வலம் வந்துகொண்டு இருக்கும் பாடகி சுசித்ரா தற்போது தனுஷ் பற்றி பேசியுள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுசித்ரா
தமிழ் சினிமாவில் சிறந்த பாடகியாக வலம் வந்து இருப்பவர் தான் பாடகி சுசித்ரா. இவர் தன் வசீகர குரலால் மக்கள் மத்தியில் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் 2017ம் ஆண்டு பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கிலிருந்து நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியானது. இந்த செய்தியை ரசிகர்கள் சுச்சி லீக்ஸ் என கலாய்த்தனர்.
சுசித்ராவின் முதல் கணவரான நடிகர் கார்த்திக் குமார் சுசித்திராவிற்கு மனநல பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக கூறி அவரை விவாகரத்து செய்தார். இந்த சுச்சி லீக்ஸ் சம்பவம் குறித்து சுசித்ரா பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் அவர் பேசியபோது 'சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தனுஷ் மற்றும் கார்த்திக்குமார் சேர்ந்து செய்த வேலை இதில் நான் தான் பலிகாடாகிவிட்டேன் என்றார்.
என்னுடைய கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் தனியாக அறையில் இருந்தார்கள் எனது கணவர் ஓரினச் சேர்க்கையாளர்' என்று பரபரப்பு செய்தியை ஏற்படுத்தி இருந்தார்.
இப்படி தனது கணவரையும் நடிகர் தனுஷ் பற்றியும் பேசிய இவர் தற்போது நடிகர் தனுஷ் பற்றி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்படி அவர் கூறும் போது “தனுஷ் என்னுடைய தம்பி மாதிரி நாங்கள் முன்னர் நல்ல நண்பர்களான இருந்தோம் இதில் சதி வேலை செய்து நல்ல நட்பை கெடுத்துவிட்டது கார்த்திக் குமார் தான்.
அவன் தான் உண்மையான வில்லன் அவனுடைய உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வேண்டும். கார்த்திக் குமாரை கல்யாணம் செய்வதற்கு முன்பே, தனுசை எனக்கு தெரியும் அவனும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.
நான் அவனை பலமுறை உரிமையோடு திட்டி இருக்கிறேன். ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்யப்போகிறேன் என்று என்னிடம் சொன்ன போது நான் தான் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். அந்த அளவிற்கு நாங்கள் நெருக்கமான நண்பர்கள்.
தனுஷ் மற்றவர்களை பழி தீர்க்கும் எண்ணம் கொண்டவர் அல்ல ஒரு இரவில் கேடு கெட்ட 20 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு அவனை அப்படி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் தனுஷ் அப்படி நடந்து கொண்டார்.
என்னைப்போல அவரும் பாதிக்கப்பட்டவர்தான். இப்போது அவரின் படம் வெற்றி அடைவதை பார்க்கும் போது உண்மையில் மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சுசித்ரா அந்த பேட்டியில் கூறியுள்ளார். தனுஷ் பற்றி குற்றச்சாட்டு வைத்த சுசித்திரா எப்படி இப்படி மாறி பேசுகிறார் என தற்போது ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |