ரோஜா ரோஜா.. பாடகர் சத்யன் பற்றி இந்த விடயம் உங்களுக்கு தெரியுமா?
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த ‘ரோஜா ரோஜா’ பாடலை பாடியவர் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
‘ரோஜா ரோஜா’ பாடலை பாடியவர் பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம் எனக் கூறப்படுகிறது.
சில பாடல்களை என்ன தான் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பாடினாலும், அதனை குறிப்பிட்ட சிலர் பாடும் பொழுது அவர்களுக்கே டப் கொடுத்து விடுகிறது.
அந்த வகையில், தற்போது ‘ரோஜா ரோஜா’ பாடலை பாடி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருப்பவர் தான் பாடகர் சத்யன் காதலர் தினம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரோஜா ரோஜா பாடல்
இந்த நிலையில், குறித்த பாடகர் யார் என இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் தேடி வருகிறார்கள்.
சத்யன் மகாலிங்கம் சுமாராக 30-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
இவருடைய குரலில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், கலக்க போவது யாரு, சரோஜா,பாஸ் என்கிற பாஸ்கரன், கழுகு ஆகிய படங்களில் பாடல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா காலத்தில் யாரும் பாடுவதற்கு வாய்ப்பு தராமல் இருந்ததால் பாடகர் சத்யன் மனமுடைந்த ஹோட்டலில் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பல வருடங்களாக முயற்சித்தும் இவரது திறமை வெளியில் பெரிதாக காட்டப்படவில்லை என்றாலும் இந்த காணொளி பட்டிதொட்டியெங்கும் இவரை பிரபலமாக்கியுள்ளது.
சத்யன் மகாலிங்கம் யார்?
முதல் முதலில் பாடகர் சத்யன் மகாலிங்கம் மேடையில் ஒரு சாதாரண பாடகராக அறிமுகமானார்.
அதன் பின்னர், பல இசைக்குழுவுடன் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார்.
அப்படியொரு நாள் நிகழ்ச்சியில் சத்யன் கடந்த 1999 -ஆம் ஆண்டு ரோஜா ரோஜா பாடலை பாடியுள்ளார்.
இந்த காணொளி தான் தற்போது இணையத்தில் படு வைரலாக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதனை பார்த்த இணையவாசிகள் “இவ்வளவு திறமை கொண்ட பாடகரின் திறமை எப்படி வெளியில் தெரியாமல் போனது?” எனக் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
இதான் சோசியல் மீடியா பவர் 🔥🔥🔥
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) September 8, 2025
இவர ட்ரேண்ட் ஆக்கி எல்லாரும் தேட வெச்சு அவர கண்டுபுடிச்சுருக்காங்க 😍 pic.twitter.com/xldIDBK4LV
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
