பிரபல பாடகருக்கு வந்த நோய் - பேசக்கூட முடியாத நிலை.. நடந்தது என்ன?
ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இசையில் பல பாடல்களை பாடிய பாடகர் தற்போது உடல் நிலை மோசமாக உள்ள நிலையில் கேபிஒய் பாலா அவருக்கு உதவி செய்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரிச்சர்ட் ஆலிசன் நாதன்
ரிச்சர்ட் ஆலிசன் நாதன் என்பவர் தமிழ்த் திரையுலகில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் ஆவார்.
இருக்கு தற்போது உடல் நில மிக மோசமாக உள்ளது. இதற்கு கேபிஒய் பாலா அவரால் முடிந்த உதவிகளை செய்து இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரிச்சர்ட் ஆலிசன் நாதன் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இசையில் பாடல்களை பாடிய பிரபல பாடகர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் இடம்பெற்ற 'நங்கை' பாடல், அதேபோல் 'நண்பேன்டா' படத்தில் இடம்பெற்ற 'நீ சன்னோ நியூ மூனோ' பாடல். அதேபோல் அனிருத் இசையில் 'ரெமோ' படத்தில் இடம்பெற்ற 'மீசை பியூட்டி' என்ற பாடல்கள் எல்லாம் இவர் பாடிய பாடல் தான்.
இந்த பாடல்கள் தற்போதும் கூட மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
பல நல்ல பாடல்கள் பாடிய திறமையான குரல் கொண்ட பாடகரான ரிச்சர்ட் தற்போது பக்கவாதம் ஏற்பட்டது போல தெரிகிறது. அவருக்கு ஒரு கை மற்றும் வாயில் இழுத்து பேச முடியாத நிலையில் உள்ளார்.

பலருக்கும் இவர் யார் என்று தெரியாது. இவரின் நிலை அறிந்து நடிகர் கேபிஒய் பாலா அவரை தேடிப் போய் உதவி செய்துள்ளார்.
ரிச்சர்டின் வீட்டுக்கே சென்ற கேபிஒய் பாலா தன்னால் முடிந்த 50 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்து ரிச்சர்ட் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் எனவும், அதற்கு தேவையான உதவிகளைச் செய்வேன் என்றும் கூறி ஆறுதல் தெரிவித்தார்.
இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |