விபத்தில் சிக்கி நடிகர் கார்த்தி.. உடனே சூர்யா செய்த உதவி- ஓபனாக பேசிய பாடகர் க்ரிஷ்
நடிகர் சிவகுமாரின் மகன்கள் குறித்து பாடகர் கிரிஷ் முதல் முறையாக மனந்திறந்து பேசியுள்ளார்.
சூர்யா - கார்த்தி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் சூர்யா - கார்த்தி.
இவர்கள் இருவரும் நடிகர் சிவகுமாரின் இரு மகன்கள் ஆவர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நடிகர் சூர்யா, சினிமாவை தாண்டி பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
சில விஷயங்கள் அதில் வெளியே தெரிந்தாலும் கூட, பல விஷயங்கள் தெரியாமல் ரகசியமாக இருந்து வருகின்றன.
உடனே உதவிக்கு ஓடிய சூர்யா
அப்படி நமக்கு இதுவரை தெரியாத, சூர்யா செய்த நல்ல விஷயத்தை பிரபல பாடகர் க்ரிஷ் பேட்டியொன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதாவது “ சிங்கம் 3 படப்பிடிப்பை முடித்துவிட்டு, நானும் சூர்யாவும் ஒரே காரில் சென்றோம், அப்போது தெருவில் ஒருவர் விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் ஒருவர் அடிபட்டு கிடந்தார்.
அவரை சுற்றி மக்கள் பலரும் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் உதவ முன்வரவில்லை. உடனடியாக காரை விட்டு இறங்கி சூர்யா அண்ணா, அடிபட்டு கிடந்தவரை தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அந்த சமயத்தில் நானாக இருந்தால் கூட உதவி செய்திருக்க மாட்டேன். ஆனால் அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் உதவி செய்தார். இந்த சம்பவம் குறித்து அவரிடம் கேட்ட போது, “அப்படி நினைத்திருந்தால் என் தம்பி இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டான். அவருடைய தம்பி கார்த்தி, கல்லூரியில் படித்த வந்தபோது விபத்து சிக்கியுள்ளார்.
அந்த சமயத்தில் கார்த்தியின் தலையில் அடிபட்டு தெருவில் கிடந்தாராம். அப்போது ஒருவர் இந்த பையனை பார்க்க சிவகுமார் மகன் போல் உள்ளதே, என உடனடியாக கார்த்தியை மருத்துவமனையில் அனுமதித்து, உயிரை காப்பாற்றியுள்ளார். அதனால் தான் இன்று கார்த்தி உயிருடன் இருக்கிறார்.” என கூறியுள்ளார். இவ்வளவு நல்ல மனிதர் சூர்யா” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |