பாடகி கெனிஷாவிற்கு துபாய் நீதிமன்றம் லட்சங்களில் அபராதம்!
பாடகி கெனிஷா நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

பாடகி கெனிஷா
நடிகர் ரவிமோகன் ஆர்த்தி இருவரும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிவதாக தகவல் வெளியானது.
பெங்களூருவைச் சேர்ந்த பாடகி கெனிஷாவுடன், ரவி மோகனுக்கு ஏற்பட்ட நட்புதான் இந்த பிரிவுக்கு முக்கிய காரணம் என்று பரவலாக சர்ச்சைகள் உருவாகின.
ரவி மோகன், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் தற்போதும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நடிகர் ரவி மோகனின் தோழியான பாடகி கெனிஷா, தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், அவ்வாறு அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஆர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதன் பின்னர் நீதிமன்றம் கெனிஷாவிற்கு அவதூறு பரப்ப தடை விதித்தது.
விமர்சனங்கள் தாங்க முடியாமல் கெனிஷா தன்னுடைய இன்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனை சொல்லிவிட்டு சென்னையை விட்டு கிளம்பினார். சூழல் இப்படி இருக்க கெனிஷா இன்னொரு சர்ச்சையிலும் சிக்கி உள்ளார்.

அபராதற்கு என்ன காரணம்?
பாடகி கெனிஷா துபாயில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பாடல் நிகழ்ச்சிக்கு பங்கேற்க பணம் தரவில்லை என சமூக ஊடகங்களில், தனியார் நிறுவனம் குறித்து பதிவிட்டிருந்தார்.
அந்த வகையில் அவருடைய தோழி அருணாவும் அதை ரீ- போஸ்ட் செய்திருந்தார். இதனால், அவதூறு பரப்பியதாக கெனிஷாவுக்கு அவரது தோழி அருணாவுக்கும் எதிராக தனியார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த பதிவுகளின் ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்து விசாரணை செய்தது. விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால், அவர்கள் இல்லாத நிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது.
அந்த வகையில், அந்த நிறுவனம் சார்பில் அவர்களுக்கு பணம் செலுத்தியதற்கான ரசீது உள்ளிட்டவை ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவதூறாக செய்தியை பரப்பியதற்காக
ஐக்கிய அரபு அமீரக இணையக் குற்றச் சட்டத்தின் கீழ், இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, தலா 5,000 திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் 1லட்சத்து 29 ஆயிரத்து 684 ரூபாய் அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |