Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
வொர்ட்டிங்கில் முதல் போட்டியாளர் யார்?
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் Grand Finale சுற்று நடக்கவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அவர்கள் முன்னிலையில், ஆத்யா, லைனட், நஷ்ரீன்,சாரா மற்றும் காயத்திரி ஆகிய ஐந்து சிறுமிகள் பங்கு கொள்கிறார்கள். இவர்களில் இதுவரையில் பெறப்பட்ட வாக்குகளில் காயத்திரி முதல் இடத்திலும் சாரா இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
அப்போது காயத்திரி, சாரா இருவருக்கும் தான் பாரிய போட்டி நடக்கவுள்ளது. இணையவாசிகளும் தங்களால் முடிந்தளவு வாக்குக்களை கொடுத்து வருகிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |