பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை..! விளாசும் நெட்டிசன்கள்
ஜனவரி 22 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், இதுகுறித்து பேசி பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிதாக ராமர் கோயிலுக்கு வருகிற 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
பிரதிஷ்டை விழா
அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், இந்த விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். மேலும் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன் லால், பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாகவே இதற்கான அழைப்பிதழும் வழங்கப்பட்டு வந்தது.
அதே போல் ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்திக்கு வரும் ஆன்மீக அன்பர்களுக்கு அத்யாவசிய தேவைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சுமார் 75 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள், விஐபி, விவிஐபி ஆகியோரை அழைத்து செல்லவும், பிரதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் கும்பாபிஷேகம் குறித்து பிரதமர் மோடி பேசியபோது, அனைவரும் தங்களுடைய வீட்டில் கார்த்திகை தீபம் போல் விளக்கேற்றி கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.
பிரதமரின் இந்த வார்த்தையை குறிப்பிட்டு பேசி, பாடகி சித்திரா வெளியிட்ட வீடியோ தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், சித்ரா
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் கார்த்திகை தீபம் போல் விளக்கேற்றி ராமரின் துதியை ஜெபிக்க வேண்டும் என கூறினார்.
இவர் சாதாரணமாக கூறி இருந்தாலும் நெட்டிசன்கள் சிலர் உங்களின் கருத்தை யார் மீது திணிக்க வேண்டாம் என்றும், நீங்கள் சொல்வதை நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என கூறி விளாசி வருகின்னறனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |