தாம்பத்திய உறவு பற்றி ஓபன் டாக் கொடுத்த சின்மயி! என்ன சொல்லிக்கிறார் தெரியுமா?
திருமணத்தின் பின்னர் தம்பதிகளின் குடும்ப வாழ்க்கை குறித்து பாடகி சின்மயி ஓபனாக பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆக்டிவாக இருக்கும் சின்மயி
பிரபல தமிழ் பேராசிரியர் வைரமுத்துவுடன் பல தடவைகள் கிசுகிசுக்கப்பட்ட சின்மயி தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் பல மேடைகளில் இவரின் வசீகரிக்கும் குரலால் பல பாடல்களை பாடியுள்ளார்.
இதனை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவான கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
அந்த வகையில், இவர் திருமணத்திற்கு பின்னர் வைத்து கொள்ளும் தாமத்திய உறவு பற்றிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
குடும்ப வாழ்க்கையில் எப்படி இருக்கனும் தெரியுமா?
அந்த கருத்துக்களில் , “முதல் முறையாக குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது சில கட்டுக்கதைகளை நம்பி தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையும் நரகமாக மாறுகிறது. முதலில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் முன்னர் அதனை நன்கு கற்று கொள்ள வேண்டும். கன்னித்தன்மை குறித்தும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
மேலும் ஆபாச வீடியோக்கள் பார்த்து அதிலிருந்து குடும்ப வாழ்க்கைக்கான குறிப்புகளை எடுத்து கொள்வது முற்றிலும் தவறான விடயம்.
குடும்ப வாழ்க்கை குறித்து திருமணத்திற்கு முன்னர் தெளிவாக தெரிந்து கொள்வது தான் சிறந்தது” என சமூகத்திற்கு தேவையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், குறித்த கருத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.