இயர் போன் வைத்து பாட்டு கேட்குறீங்களா? கேட்கும் திறனை இழந்த பிரபல பாடகி
பிரபல பாடகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திடீரென காது கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்கா யாக்னிக்
பாலிவுட் திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பாடி புகழ்பெற்றவர் தான் அல்கா யாக்னிக். இவர் சில வாரங்களுக்கு முன்பு விமானத்திலிருந்து இறங்கிய போது திடீரென தனக்கு காது கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
சில நாட்களாக காது கேட்கவில்லை என்றும் இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ள நிலையில், தற்போது தைரியமாக வெளியே சொல்வதாக கூறியுள்ளார்.
தன்னுடைய காதுகளை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் வைரஸ் தாக்குதல் காரணமாகவும், நரம்பு பாதிப்பு காரணமாகவும் தனது காது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இதற்காக சிகிச்சை எடுத்து வருவதாக தன்னுடைய காது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன், இதற்காக சிசிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்காக ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்ட அவர் ஹெட்போன்களில் அதிக சத்தத்துடன் இசையை கேட்க வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக காதுகளை பராமரித்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |