இந்த வேலையெல்லாம் இங்க வச்சிக்க கூடாது.. சாய்பல்லவியை கடிந்த பிரபல இயக்குனர்!
சாய்பல்லியிடம் “இந்த வேலையெல்லாம் இங்க வச்சிக்க கூடாது..” என இயக்குநர் செல்வராகவன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சாய்பல்லவி
பிரபல தொலைக்காட்சியில் நடன கலைஞராக அறிமுகமாகியவர் தான் நடிகை சாய்பல்லவி.
இதன் பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான “ப்ரேமம்” படத்தின் மூலம் மலர் டீச்சராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் இவர் நடிப்பில் தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் வெளியாகின.
மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
கவர்ச்சியை தள்ளி வைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சாய்பல்லவி வித்தவுட் மேக்கப்பில் தான் நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.
மிரட்டி அனுப்பிய இயக்குநர்
இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்த நடிகை உமா படபிடிப்புத்தளத்தில் நடந்த சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில், “ மற்ற இயக்குனர்கள் தனக்கென ஒரு மானிட்டர் வைத்து குறிப்பிட்ட சீன் முடிந்த பின்னர் ஹீரோ, ஹீரோயின்களை பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் செல்வராகவன் மானிட்டர் பக்கம் யாரையும் அனுமதிக்கமாட்டார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் யாரையும் அனுமதிக்கமாட்டார்.
அப்போது ஒருமுறை சாய்பல்லவி மானிட்டரில் தன் முகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க எட்டி பார்த்திருக்கிறார். உடனே செல்வராகவன் “நோ நோ இது என்னுடையது இப்படி எட்டி பாக்குற வேலையெல்லாம் இங்க வச்சுக்க கூடாது. யாரும் இங்கே வரக்கூடாது” என கூறி சாய்பல்லவியை அனுப்பி விட்டார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |