Singappenne: உண்மையை கண்டுபிடிக்கும் யாழினி - வில்லித்தனத்தை காட்டும் துளசி
சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது யாழினி துளசியை கையும் களவுமாக பிடிக்கிறார். இதனை தொடர்ந்து திருமணம் யாருடன் நடக்கப்போகின்றது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சிங்கப்பெண்ணே
தற்போது இல்லத்தரிகளின் வரவேற்பை பெற்று சிங்கப்பெண்ணே சீரியல் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதில அன்புவும் ஆனந்தியும் சேர்வது தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆசையாக இருக்கிறது.
இந்த நிலையில் ஒரு வேளை மகேஷ் தான் ஆனந்தி கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தால் கதைக்களம் எவ்வாறு நகரும் என்று சொல்ல தெரியவில்லை.
உண்மை அறியும் யாழினி
மகேஷ் தன் அம்மா கொடுத்த தாலியை தனது அலுமாரியில் வைத்திருந்தார். அதை துளசி திருடி அன்பு அம்மாவிடம் ஒரு புதிய திட்டத்தை கூறுகிறார்.
தனக்கும் அன்புவிற்கும் எப்படியாவது நிச்சயதார்த்தம் செய்த அன்றே திருமணம் செய்து வைக்க இதற்கிடையில் ஆனந்தியை மணப்பெண் போல தயார் செய்து மகேஷ் திட்டப்படி அவர் நண்பர்கள் எல்லோரும் அழைத்து வருகின்றனர். யாருடன் யாருக்கு திருமணம் நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |