Singappenne: கடிதத்தில் எழுதியிருந்த உண்மை - துளசியின் சுயரூபம் வெளிப்பட்ட தருணம்
துளசி அன்புவை திருமணம் செய்ய தான் சென்னைக்கு திட்டம் போட்டு வந்திருக்கிறார் என்ற உண்மையை யாழினி அறிகிறார்.
Singappenne
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர்.
வர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கியுள்ளார். இருந்தாலும் ஆனந்தியும் அன்புவும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக மகேஷ் உதவி செய்து வருகிறார்.
ஆனால் அன்புவை காதலித்த அத்தை மகள் துளசி ஆனந்தி அன்புவை பிரிக்க அன்புவின் அம்மாவை கைகுள் போட்டு வைத்துள்ளார். இந்த சதியை யாழினி கண்டுபிடிக்கிறார்.
துளசியின் உண்மை முகம் அறிந்த யாழினி
இந்த நிலையில், அன்புக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முயற்சி செய்த அவருடைய அம்மாவின் பிடிவாதம் பலிக்க துளசி ஏதேதோ சூழ்ச்சிகள் செய்து அதை தன்வயப்படுத்தியுள்ளார்.
யாழினி ஏதோ ஒரு கடிதத்தை எடுத்து அன்புவிடம் உண்மையை கூற போவதாக துளசியிடம் கூறுகிறார்.
ஆனால் அதற்கு துளசி சிரிக்கிறார். இந்த பக்கம் ஆனந்தியிடம் துளசியை அண்ணா திருமணம் செய்து கொள்ள கூடாது. அண்ணா சந்தோஷமாக இருக்க மாட்டான் என கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |