Singappenne: அன்பு ஆனந்தியை சுற்றவிட்ட ரகு.... மகேஷிடம் வசமாக சிக்கிய மித்ரா, கருணாகரன்
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி ரகுவை பிடிப்பதற்கு முயற்சித்துவரும் நிலையில், சில நொடிகளில் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகு எஸ்கேப் ஆகியுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகின்றது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியைக் காதலித்து வந்தனர்.
பின்பு அன்புவும் ஆனந்தியும் காதலிப்பதை அறிந்த மகேஷ் ஒதுங்கி போயுள்ளார். இந்நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்தது.
தற்போது கம்பெனியிலும் அனைவருக்கும் தெரிந்த நிலையில், அனைவரும் ஆனந்திக்கு ஆறுதலாக இருக்கின்றனர். தற்போது ரகுவின் நண்பனை கைக்குள் போட்டுவிட்டு ஆனந்தி அன்பு ரகுவை பிடிப்பதற்கு முயற்சிக்கி்னறனர்.
ஆனால் தற்போது வெளியான காட்சியில் ஆனந்தி, அன்பு போனில் பேசிக்கொண்டிருக்கையில், ரகுவும், நண்பனும் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
மற்றொரு புறம் மித்ரா, கருணாகரன் இருவரும் மகேஷிடம் வசமாக சிக்கியுள்ளனர். தற்போது கதையின் போக்கு பரபரப்பாக செல்லும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |