Singappenne: கண்விழித்த ரகுவை கடத்திய கருணாகரன் - ஆனந்தியிடம் மாட்டிக்கொண்ட தருணம்
சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று ரகு கண் விழித்தவுடன் கருணாகரன் மற்றும் மித்ரா அவனை கடத்தி தப்பி செல்ல முற்படுகின்றனர்.
Singappenne
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது ஒரு ரசிகர் பட்டாளத்தை தன்வயப்படுத்தி உள்ளது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர்.
இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இதனால் மமேஷ் ஆனந்தியை விட்டு ஒதுங்கி உள்ளார். தற்போது ஆனந்தியின் கர்ப்ப விடயம் அனைவருக்கும் தெரிந்துள்ளது.
இதனால் அன்பு ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்காக முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் சமயத்தில் இதற்கு ஆரம்ப கர்த்தாவாக ரகு அன்புவிடம் சிக்குகிறான்.
கடந்த எபிசோட்டில் பாாத்திருப்போம் ரகு மருத்துவமனையில் உள்ளது போல காட்டி இருப்பார்கள்.
ரகுவை கடத்திய மித்ரா,கருணாகரன்
மித்ராவும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஆனந்திக்கு இந்த கர்ப்ப விடயத்தில் பல துரோகத்தை மித்ரா செய்கிறார். இப்படி எபிசோட்டில் காட்டப்படுவதற்கு காரணம் முழு உண்மையையும் தெரிந்தவர் மித்ரா மட்டும் தான்.
எனவே அவர் மூலமாக தான் அனைவருக்கும் உண்மை தெரிய வேண்டும் என கதைக்களம் நகர்ந்து செல்லுமோ தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போதைய ப்ரோமொ காட்சியின்படி மருத்துவமனையில் இருந்து ரகு கண்விழித்து விட்டு தப்பி ஓட முயற்ச்சிக்கிறான்.
அந்த சமயத்தில் அங்கிருந்த தாதி ஒருவர் ரகு தப்பிக்கும் விடயத்தை ஆனந்தியிடம் கூறுகிறார். ஆனந்தி அன்பு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கும் சமயத்தில் கருணாகரன் மற்றும் மித்ரா அவனை கடத்தி செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து கருணாகரன் மற்றும் மித்ரா அன்பு ஆனந்தியடம் மாட்டுவார்களா? எப்படி கதைக்களம் நகர்ந்து செல்லப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |