Singappenne: கடைக்காரரால் மாட்டிக்கொண்ட ஆனந்தி - துளசியின் சூழ்ச்சியில் சிக்கும் அன்பு
அன்புவின் அம்மாவிடம் துளசி தன் கழுத்தில் அன்புவை தாலி கட்ட வைக்க வேண்டும் என கூறுகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அன்புவை மகேஷ் சந்தேகப்பட்டதும் தற்போது மனம் மாறிய விடயங்கள் எல்லாம் காட்டப்பட்டது.
இந்த நிலையில் அன்பு மற்றும் ஆனந்தியை சேர்த்து வைக்க மகேஷ் போட்டுள்ள திட்டம் நடக்குமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துளசியின் சூழ்ச்சி
ஆனந்தியும் அன்புவும் திருமணத்திற்காக புடவை எடுக்க சென்றிருக்கும் கடைக்கு தான் துளசியும் அன்பு அம்மாவும் சென்றுள்ளனர். இதை கடைக்காரர் அன்பு அம்மாவிடம் போட்டுக்கொடுத்து விட்டார்.
ஆனால் தனக்கும் அன்புவிற்கும் திருமணம் நடக்கவிருப்பது ஆனந்திக்கு தெரியாது. இந்த நிலையில் துளசிக்கும் அன்புவிற்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.
ஆனால் துளசி இந்த நிச்சயதார்த்ததில் அன்பு அம்மாவை ட்ராமா செய்ய வைத்து தன் கழுத்தில் அன்புவை தாலி கட்ட வைக்க வேண்டும் என அன்பு அம்மாவிடம் கூறுகிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |