Singappenne: கொலை செய்யப்பட்ட நந்தா... ஆனந்தி மீது விழும் பழி! பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் நந்தா கொலை செய்யப்பட்டதாக ஆனந்தியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் டிஆர்பி-யில் முன்னணியில் இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலின் தற்போதைய ப்ரொமோ காட்சி அனைவரின் எதிர்பார்ப்பினை அதிகரித்து வருகின்றது.
குறித்த சீரியலில் கிராமத்து பெண் ஒருவர் சென்னை நகரத்தில் படும் கஷ்டத்தையும், கடந்து வரும் பாதைகளையும் விளக்கப்பட்டுள்ளது.
தர்ஷன் கிருஷ்ணா என்பவர் இயக்கும் குறித்த சீரியலில், குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் வேலை செய்து கஷ்டப்படும் பெண் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பிரபல நடிகை மனீஷா மகேஷ் நடித்து வருவதுடன், இவருடன் அன்பு என்ற கதாபாத்தில் அமல் ஜித் மற்றும் மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடா என இரண்டு கதாநாயகர்கள் நடித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் தன்னை வெறுத்த ஆனந்தியிடம் அன்பு, அழகன் என்ற முகம்தெரியாத நபராக உதவி செய்து அவரது மனதில் இடம் பிடித்துள்ளார். ஆனால் மகேஷும் மற்றொரு புறம் ஆனந்தியை காதலித்து வருகின்றார்.
இவர்களுக்கு இடையே மித்ரா என்ற கதாபாத்திரத்தில் வில்லி ஒருவர் மகேஷை திருமணம் முடிக்க நினைக்கும் நிலையில், இடையில் வந்த ஆனந்திக்கு பல இடையூறுகளை கொடுத்து வருகின்றார்.
கைது செய்யப்பட்ட ஆனந்தி
அழகன் விடயத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மித்ரா ஆனந்திக்கு எதிராக சதி செய்ய ஆரம்பித்து, நந்தா ஒருவரை ஏற்பாடு செய்து ஆனந்தியிடம் பழக விட்டுள்ளார்.
பின்பு இந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்த ஆனந்தி தற்போது நந்தாவின் கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் வெகு விமர்சையாக கொண்டாடிய ஒருசில நாட்களில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையில் ஆழ்ந்துள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |