Singappenne: அன்பு செய்த சத்தியம்... நெற்றி வகிட்டில் ஆனந்தி வைத்த குங்குமம்! மாற்றத்திற்கு என்ன காரணம்?
சிங்கப்பெண்ணே சீரியலில் ரகுவின் மனைவியைக் கண்டுபிடிப்பதற்கு உறுதுணையாக இருப்பதாக அன்பு ஆனந்தியிடம் சத்தியம் செய்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு ஆனந்தி திருமணம் நடந்து முடிந்த நிலையில், அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்ளாமல் இருந்த ஆனந்தி தனக்கு நடந்த திருமணத்தினையும் வெறுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் ஆனந்தியின் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போயுள்ளது. இத்தருணத்தில் அன்புக்கு அடுத்தடுத்து பல அடியும் விழுந்தது. இதனால் ஆனந்தி பதறிய போது, உடன் வேலை செய்பவர்கள் தாலி காணாமல் போனதால் தான் என்று காரணம் கூறினர்.
இதனால் கோவிலில் பரிகாரம் செய்ய சென்ற போது ஆனந்தியின் தாலி கிடைத்தது. உடனே அதனை தனது கழுத்தில் ஆனந்தியே அணிவதற்கு சென்றார்.
உடனே பூசாரி கணவர் கையால் தான் போட வேண்டும் என்று கூறிய நிலையில், மீண்டும் ஆனந்தியின் சம்மதத்துடன் அன்பு தாலியை கழுத்தில் போட்டுள்ளார்.
இதுவரை நெற்றி வகிடில் குங்குமம் வைக்காத ஆனந்தி தற்போது முதன்முதலாக வைத்துள்ளார். மேலும் ரகுவின் மனைவியைக் கண்டுபிடிப்பதற்கு தானும் உறுதுணையாக இருப்பேன் என்று அன்பு ஆனந்தியிடம் சத்தியம் செய்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |