Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி
ஆனந்தி அன்புவிடம் நிச்சயதார்த்தம் முடியும் வரைக்கும் உண்மை யாருக்கும் தெரிய கூடாது என கூறுகிறார். இந்த நிலையில் ஆனந்திக்கு எதிராக இருந்த யாழினி உதவி செய்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்டிசியில் சிங்கப்பெண்ணே சீரியல் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் ஒரு கதாநாயகி அவரை இரு கதாநாயகர்கள் காதலித்து வருகின்றனர்.
ஆனால் மகேஷின் குழந்தை தற்போது ஆனந்தி வயிற்றில் வளர்கிறது. இந்த உண்மை யாருக்கும் தெரியாது.
இன்னுமொரு பக்கம் அன்பு அனந்தி எந்த தப்பும் செய்திருக்க மாட்டார் என்று ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க உறுதுணையாக இருக்கிறார்.
ஆனந்தியை ஒரு காலத்தில் மருமகளாக ஏற்றுக்கொண்ட அவரது அம்மா கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் துளசியின் பிடியில் மாட்டிக்கொண்டு ஆனந்தியையும் அன்புவையும் பிரிக்கும் எண்ணத்துடன் இருக்கிறார்.
அன்பு ஆனந்தியின் புதிய திட்டம்
முதலில் தன் அண்ணனை ஆனந்தி திருமணம் செய்ய மூடாது என நினைத்த யாழினிக்கு தற்போது துளசி அன்புவை அடைய செய்யும் சூழ்ச்சி தெரியவந்து அவர் இப்போது தன் அண்ணணுக்கு ஏற்ற ஜோடி ஆனந்தி தான் என புரிந்து கொள்கிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமொ படி ஆனந்தி துளசிக்கும் அன்புவிற்கும் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தம் மகேஷ்க்கு தெரியாமல் இருக்க வேண்டும் என அன்புவிடம் கூறுகிறார்.
ஆனால் இதில் இருக்கும் ஒரு டுவிஸ்ட் என்னவென்றால் மகேஷ் விழாவில் அனைவர் முன்னிலையிரும் அன்புவிற்கும் ஆனந்திக்கும் நிசசயதார்த்தம் என கூறப்போகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
