Singappenne: மீண்டும் அரங்கேறும் அன்பு, ஆனந்தி திருமணம்... எதிர்பாராத திருப்பம்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியிடம் அன்பு எரிமலையாய் கோபத்தில் வெடிக்கும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு ஆனந்தி திருமணம் நடந்து முடிந்த நிலையில், அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்ளாததால் ஆனந்தியின் அக்கா கணவருடன் அன்பு தங்கியுள்ளார்.

மகேஷின் உயிரைப் பறிக்க திட்டம் தீட்டியதை அன்பு தவிடுபொடியாக்கி, மகேஷைக் காப்பாற்றியுள்ளார். ஆனந்தி தாலியை தொலைத்துவிட்டதால் அன்பு கடும் கோபத்தில் இருக்கின்றார்.
அன்புவிற்கும் அவ்வப்போது அடிபட்டு வருவதால் ஆனந்தி கோவிலில் நேர்த்திகடன் செய்வதற்கு தயார் ஆகியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் அன்பு ஆனந்தி கழுத்தில் தாலிகட்டும் முடிவிற்கு வந்துள்ளது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |