Singappenne: அக்காவின் வாழ்க்கைக்கு ஆனந்தி எடுத்த முடிவு... மகிழ்ச்சியில் அன்பு
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அக்காவின் வாழ்க்கைக்காக புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ள நிலையில், வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தனது கர்ப்பத்திற்கு காரணம் தெரியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது அக்காவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் ஆனந்தியை சமீபத்தில் அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் இருவரும் கடத்தி சென்று உயிரை பறிக்க நினைத்த நேரத்தில் அன்பு அவரைக் காப்பாற்றியுள்ளார்.

தற்போது ஆனந்தியால் அக்கா கோகிலாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் ஆனந்தி முக்கியமான முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.
அதாவது அன்பு வீட்டிற்கு சென்று தான் வாழ்வதற்கு தயார் என்று தனது முடிவைக் கூறியுள்ளார். இந்நிலையில் கம்பெனியில் அரவிந்த் பிரச்சனை கொடுத்து வரும் நிலையில், மகேஷ் மாஸ் எண்ட்ரி கொடுத்து சில முடிவையும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |