Viral Video: பொறுமையாக இருந்த நாரைக்கு கிடைத்த மீன் வேட்டை... வைரலாகும் காட்சி
நாரை ஒன்று ஒரே நேரத்தில் இரண்டு மீன்களை பிடித்து மிகவும் பொறுமையாக தனக்கு உணவாக்கியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடுவதற்காக தண்ணீரில் இறங்கியுள்ளது.
அப்போது அதற்கு சாதகமாக இரண்டு மீன்கள் கிடைத்துள்ளது. ஆனால் அது ஒரு மீனை மட்டும் சாப்பிட்டுவிட்டு மற்றொன்றை கீழே விட்டு விட்டது.
மற்றொரு மீன் தப்பித்துவிட்டது என்று நினைத்த தருணத்தில், அதனையும் கீழே இருந்து எடுத்து சாப்பிட்டுள்ளது. இக்காட்சி வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |