Singappenne: பொங்கல் கொண்டாட்டத்தில் வில்லியாக இறங்கிய அன்புவின் அம்மா... அடுத்து நடக்கவிருப்பது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடியுள்ள நிலையில், வில்லியாக அன்புவின் அம்மா எண்ட்ரி கொடுத்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தனது கர்ப்பத்திற்கு காரணமான நபரை ஆனந்தி தீவிரமாக தேடிவரும் நிலையில், ஆனால் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அன்புவின் அம்மா, துளசி, மித்ரா இவர்களின் தொந்தரவையும் ஆனந்தி சகித்துக் கொண்டிருப்பதுடன், அவ்வப்போது அன்புவுடன் சில மகிழ்ச்சியான தருணத்தினையும் கடந்து செல்கின்றார்.

ஆனந்தியை மகிழ்ச்சியாக்க வார்டன் சர்ப்ரைஸாக பெற்றோரை வரவழைத்த நிலையில், அவர்களும் வந்து பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஆனால் இதில் டுவிஸ்ட் என்னவெனில் அன்பு இருக்கும் இடம் அவரது அம்மாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் பயங்கர கோபத்துடன் அன்புவின் அம்மா வந்துள்ளார்.
அனைவரும் சந்தோஷமாக இருந்த தருணத்தில் அன்பு அம்மாவின் எண்ட்ரி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |