Singappenne: துளசியின் சதியால் பிரியும் காதல் ... கதறி அழும் ஆனந்தி
துளசி தாலியை திருடி வைத்துள்ளதை அறியாத அன்பு திருமணத்தை நினைத்து கவலைப்படுகிறார்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது அன்புக்கும் ஆனந்திக்கும் ரகசிய திருமணம் நடக்கப்போகின்றது. இது மகேஷ் திட்டப்படி நடக்கும். ஆனால் மித்ரா தனக்குள் வைத்திருக்கும் ஆனந்தி சம்பந்தப்பட்ட உண்மையை கண்டறிய முழு ஆர்வத்துடன் இருக்கிறார்.
எல்லா சீரியல்களும் போல இந்த சீரியலிலும் கடைசியில் உண்மையை மித்ரா கூறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் கடந்த எபிசோட்டில் துளசி தாலியை திருடி வைத்திருப்பது அன்புவிற்கு தெரியாது.
தற்போது காணப்படும் ப்ரொமொவில் அம்மாவின் தாலியை தான் ஆனந்திக்கு கழுத்தில் கட்ட வேண்டும் என்று மகேஷிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறார் அன்பு.
இன்னுமொரு பக்கம் ஆனந்தி அன்புவை பிரிவதில் துயரம் இருந்தாலும் அதை மனதாற ஏற்றுக்கொண்டு அன்புவை பிரிவதாக வார்டனிடம் கூறுகிறார். இந்த அனைத்து தடைகள் தாண்டி அன்பு ஆனந்தி ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |