Singappenne: ஆனந்தியின் தல பொங்கல் கொண்டாட்டம்... வார்டன் கொடுத்த சர்ப்ரைஸ்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் தல பொங்கலை சிறப்பாக மாற்றுவதற்கு வார்டன் கொடுத்துள்ள சர்ப்ரைஸ் ஆனந்தியை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தனது கர்ப்பத்திற்கு காரணமான நபரை ஆனந்தி தீவிரமாக தேடிவரும் நிலையில், ஆனால் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அன்புவின் அம்மா, துளசி, மித்ரா இவர்களின் தொந்தரவையும் ஆனந்தி சகித்துக் கொண்டிருக்கின்றார். அன்பு மீது இருக்கும் காதலை மறைத்து வாழ்ந்து வரும் ஆனந்திக்கு வார்டன் ஒரு இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது அன்புவுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாட ஆசைப்பட்ட ஆனந்தி, தனது சூழ்நிலையினால் வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார்.
ஆனால் ஆனந்தியின் மனநிலையை புரிந்து கொண்ட வார்டன், அமைதியாக அவரது அம்மா, அப்பாவை ஹாஸ்டலுக்கு வரவழைத்துள்ளார்.
அம்மா அப்பாவைக் கண்ட ஆனந்தி மகிழ்ச்சியில் மூழ்கியதுடன், தல பொங்களையும் விமர்சையாக கொண்டாடவும் செய்கின்றார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |