Singappenne: ஆனந்திக்கு விழுந்த அறை.. எதிர்த்து நிற்கும் அன்பு தங்கச்சி- கண்டுபிடிப்பார்களா?
சிங்கபெண்ணே சீரியலில் ஆனந்தியை அன்பு தங்கச்சி பளார் என அறைகிறார். அத்துடன் நிறுத்தாமல், “ என்னுடைய அண்ணாவை உன்னுடைய குழந்தைக்கும் உனக்கும் சொந்தமாக்க பார்க்கிறியா?” என கடுமையாக பேசுகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார்.
இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்தி நண்பனை வைத்து ரகுவை பிடித்து விடலாம் என முயற்சி செய்த போது மித்ரா நடுவில் வந்து அனைத்தையும் மாற்றி விடுகிறார்.
ஆனந்திக்கு விழுந்த அறை
இந்த நிலையில், அன்புக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முயற்சி செய்த அவருடைய அம்மாவை அன்பு கடுமையாக திட்டி விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன அவருடைய அம்மா வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.
அன்பு அம்மா வீட்டை விட்டு சென்றால் அவருடைய தங்கச்சியும், மாமன் மகளும் தனியாக அழைந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆனந்தி உதவி செய்யலாம் என செல்லும் பொழுது ஆனந்தியை அன்பு தங்கச்சி பளார் என அறைந்து விடுகிறார்.
அத்துடன் நிறுத்தாமல்,“என்னுடைய அண்ணாவை உன்னுடைய குழந்தைக்கும், உனக்கும் சொந்தமாக்கிக் கொள்ள பார்க்கிறாயா?” என்றும் கேட்கிறார். ஆனாலும் ஆனந்திக்கு மனம் கேட்கவில்லை, அன்பிற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அன்புக்கு உதவிச் செய்ய ஆனந்தி செல்கிறார். இவை அனைத்தையும் அன்புவின் மாமன் மகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |