Singappenne: வீட்டிற்கே சென்ற ஆனந்தி.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம்
அனைத்து விடயங்களுக்கு காரணமாக இருக்கும் கருணாகரன் கடைசியாக சிக்கியுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார்.
இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது.
ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள். கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்திக்கு தற்போது ரகுவின் நண்பன் உதவிச் செய்கிறார். அன்புவின் துணையுடன் ரகுவை பிடிப்பதற்கான முயற்சியை ஆனந்தி செய்து வருகிறார்.
விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்
இப்படியொரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், கருணாகரன் அவசர அவசரமாக வீட்டில் ரெடியாகிக் கொண்டிருக்கும் பொழுது அன்பும், ஆனந்தியும் சென்று கதவு உடையும் வரை தட்டுகிறார்கள்.
இந்த விடயம் தெரியாமல் மனைவியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் கருணாகரன் தன்னுடைய மகன் தான் பசியில் கதவை இப்படி தட்டுகிறான் என நினைத்துக் கொண்டு கதவை திறக்கிறார்.
ஆனந்தியின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கும் கருணாகரனை அன்பு வெளுத்து வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஆனந்தியும் தன்னை போன்று ஒரு பெண் தான் என நினைக்காமல் மோசமாக நடந்து கொண்ட மித்ராவிற்கு அன்பு தகுந்த பாடம் புகட்டுவார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
