கொப்பரை தேங்காய் மூலம் 6 கோடி வருமானம்! சாதனை படைத்த கிராமத்து பெண்!
தமிழ்நாட்டில் தான் அனைத்து விதமான மக்களும் வாழ்ந்து வருகின்றனர். பணக்காரர்கள் முதல் ஏழைக் குடும்பங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் வசிக்கின்றனர். படிப்பை படிப்பை மிகப்பெரிய அளவில் நம்பும் மக்கள் கொண்ட மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான்.
அந்த வகையில், திருப்பூரில் ஒரு சிறு கிராமத்தில் MBA மருமகள் செய்த அற்புதம் பலரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் தான் சிந்து.
சிறுவயதில் இருந்தே சிந்து, பள்ளியில் படிக்கும் போது பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் தலைவரான இந்திரா நூயி அவர்களின் ரசிகராக இருந்துள்ளார். சொல்லப்போனால் பள்ளி படிக்கும் போதே இந்திரா நூயி புகைப்படத்தைத் தன் வீட்டில் வைத்திருந்துள்ளார் சிந்து.
இதனால், கல்லூரி படிப்பை முடித்த பின்பு சிந்து பிரிட்டன் நாட்டில் இருக்கும் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான வார்விக் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார். லண்டனில் சில வருடம் பணியாற்றினார்.
இதனைத்தொடர்ந்து, 2009-ல் இந்தியா வந்த சிந்து தனது சகோதரர் உடன் சேர்ந்து ஈகாமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கி மொபைல் போன் மற்றும் புத்தகங்களை விற்பனை செய்யத் துவங்கினார்.
ஆனால் 2 வருடத்தில் இந்த வர்த்தகம் மூடப்பட்டது, இந்த இரண்டு வருடத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருக்கிறார். சிந்துவை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட பெண்கள் 2012-ல் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிறு கிராமமான மொடக்குப்பட்டி-ஐ சேர்ந்த அருண் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அருண் அவர்களின் குடும்பம் கொப்பரை தேங்காய் விற்பனையில் உள்ளது.
இந்நிலையில், குடும்பத்துடன் வர்த்தக்கத்தை தொடங்கிய சிந்து, 2013-ல் கொப்பரை மற்றும் தேங்காய் வர்த்தகத்தை எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் என்ற பெயரில் பதிவு செய்தனர். மொத்த வர்த்தகத்தையும் குடும்பத்தினரே நிர்வாகம் செய்து வந்த நிலையில் முறையான நிர்வாகம் இல்லாமல் இருந்து.
இதற்காக, சிந்து அனைத்துத் தரப்பு பணிகளையும் சீர்படுத்த மேற்பார்வையாளர் மற்றும் ஒரு கணக்காளர்-யும் நியமித்தார். இதன் பின்பு சிந்து உருவாக்கிய எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் குடும்ப வர்த்தகம் நிறுவனத்திற்கு இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான மாரிக்கோ (Marico) உடனான ஒப்பந்த்தை புதுப்பிக்கப்பட்டது.
2014-ல் முதல் மாரிக்கோ நிறுவனத்திற்குத் தேங்காய்-க்குப் பதில் கொப்பரை தேங்காய்-ஐ சப்ளை செய்யத் துவங்கினார் சிந்து. 2017-ல் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல AgriPro Industries என்ற புதிய நிறுவனத்தை எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான துவங்கப்பட்டது.
அதன் பின்னர், கொப்பரை தேங்காய்களை மரச்செக்கு எண்ணெய் தயாரித்து PRESSO என்ற பெயரில் அறிமுகம் செய்தார் சிந்து. மரச்செக்கு எண்ணெய் தயாரிக்க இயந்திரங்கள் மற்றும் அலையைக் கட்டமைக்க 12 லட்சம் ரூபாய் தொகையை உறவினர் மற்றும் நண்பர்களிடமும், 8 லட்ச ரூபாயை சிந்து-வின் தங்க நகைகளை வைத்து மொடக்குப்பட்டி-யிலேயே மரச்செக்கு எண்ணெய் தயாரிப்புத் தளம் அமைக்கப்பட்டது.

இதனால், உற்பத்தியிலும், தரத்திலும் எவ்விதமான குறைபாடும், தாமதமும் இருக்க கூடாது என்பதை முடிவு செய்த சிந்து மற்றும் அருண் தேங்காய், கடலை, எள் ஆகியவற்றை உள்ளூர் மற்றும் அருகில் இருக்கும் மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்து PRESSO பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டது.
PRESSO பிராண்ட் வெறும் கோவை பொள்ளாச்சி மட்டும் விற்பனை செய்யும் பிராண்டாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த சிந்து, ஈகாமர்ஸ் அனுபவம், எம்பிஏ படிப்பு, லண்டன் வேலையில் கிடைத்த அனுபவம் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து வர்த்தகத்தை ஆன்லைன் தளத்திற்குக் கொண்டு சென்று இந்தியா மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வர்த்தகத்தைச் சில வருடங்களிலேயே விரிவாக்கம் செய்தார் சிந்து.
தற்போது, PRESSO மரச்செக்கு எண்ணெய் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, போபால், ஹரியானா, ஆகிய மாநிலத்திலும் பிரபலமாக உள்ளது. மேலும் கத்தார் நாட்டுக்குத் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் மலேசியா மற்றும் பிரிட்டன் விற்பனையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சிந்து.
2020-21-ம் ஆண்டில் மட்டுமே, PRESSO பிராண்ட் மற்றும் எவர்கிரீன் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் மூலம் சுமார் 6 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதலை (Turnover) அடைந்துள்ளது. மேலும் சிந்து சுமார் 15 பெண்களை வைத்து மொத்த வர்த்தகத்தையும் நிர்வாகம் செய்து அசத்தி வருகிறார்.